இஸ்ரேலின் மொஸாட் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை கைது செய்த ஈரான்
ஈரானின் முக்கிய தளங்கள் உட்பட மூத்த ராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்களை இஸ்ரேலின் மோஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் ராணுவம் கைதுசெய்துள்ளது. ஜூன் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதல்களின்போது மோஸாட் உளவு அமைப்புக்கு அந்த முக்கிய தகவல்களைக் குற்றஞ்சாட்டப்பட்டோர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதலில் ஈரானின் அணுவாயுதக் கட்டமைப்புகளை இஸ்ரேல் அழித்ததுடன் உயர் ராணுவத் தளபதிகளையும் கொன்றது. ஈரான் பதிலடியாக இஸ்ரேலின் ராணுவத் தளங்கள், உள்கட்டமைப்புகள், […]













