பிரித்தானிய புகலிடக் கொள்கையில் மாற்றம்
பிரித்தானியாவின் புகலிடக் கொள்கையில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. கனடாவின் புகலிட முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள், பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் அகதிகளுக்குப் பொறுப்பேற்று (Sponsor) அழைத்து வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் […]













