பெண்ணுக்கு நடந்த பேரவலம் – பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியா, Stockport பகுதியைச் சேர்ந்த 13 ஆண்கள், பெண்ணொருவருக்கு எதிராக நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் Greater Manchester காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் குறித்த பெண்ணின் கணவரும் உள்ளடங்குகின்றார்.
அவர் தனது மனைவியை மற்றவர்களுடன் இணைந்து மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் ஏற்கனவே தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவரின் கணவர் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
28 முதல் 73 வயதுக்குட்பட்ட இந்த கும்பல் மீது சதித்திட்டம் தீட்டுதல், போதைப்பொருள் அளித்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.




