இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மலையக கட்சிகள் வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக இது அமைந்தது.

எனவே, ஏனைய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.

இது இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும். எனவே, அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாகாண சபைகள் தற்போது இயங்காததன் காரணமாக அவற்றின் நிர்வாக மற்றும் மக்கள் சேவைகள் சார்ந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை