ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு: 5ஆவது இடத்தில் இந்தியா!
ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதென தரவுகள் தெரிவிக்கின்றன.
சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் அனைத்து உலக அமைதி ஆய்வுக் கழகம வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 2025ஆம் ஆண்டில் இந்தியா தனது ராணுவத் தேவைக்காக 92.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது பாதுகாப்புச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ராணுவச் செலவினங்களில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உள்ளது.
மேற்படி பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ரஷ்யாவும், 4-ம் இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.





