இலங்கை செய்தி

ஹட்டனில் கோர விபத்து: ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் , பொலிஸார். இணைந்து மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!