இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் மின்சார கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பனவற்றுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இவ்வாறு கட்டணங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக நாட்டில் மின்சார பயன்பாடு சுமார் 20 சதவீதம் குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை நடைபெற்ற காலத்தில் எட்டு கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தாம் அதனை 10 கிகாவோட் மணித்தியாலங்களாக அதிகரிக்குமாறு கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.எனினும் தற்பொழுது நாட்டில் 13 கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.35 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டிய மின்சார கட்டணத்தை அரசாங்கம் 65 சதவீதம் உயர்த்தியுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இதன் காரணமாக மின்சார பயன்பாடு குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content