இந்தியா செய்தி

மாற்றுத்திறனாளிப் பெண் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இந்தியாவில் கொடூரம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடைய பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடைய பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர்மெட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சையத் ஜாவீத் (37), அர்புலா வெங்கடேஷ் (30) ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அறிமுகமான சையத் ஜாவீத் வாகனத்தில் வந்து அவரை அணுகியுள்ளார்.

பெண்ணின் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி வாகனத்தில் ஏறிய பெண்ணுக்கு வழியில் மயக்கமூட்டும் பொருள் கலந்த குளிர்பானம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைப் பருகிய பின்னர் அவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர், ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை சையத் ஜாவீத் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரைச் சென்றடைந்து சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவரது தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்துல்லாபூர்மெட் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி