EUவில் சேரும் பிரித்தானியாவின் முடிவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின் வரவேற்பு
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த ஆர்வத்தை இன்று வெளிப்படுத்தினர்.
அத்துடன் சீனாவுக்கு எதிராக ஐரோப்பா வர்த்தக பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டனர்.
பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த சாத்தியக்கூறை பிரதமர் ஆண்டி பர்னம் வெளிப்படுத்தினார்.
இதனை மேக்ரான் “சிறப்பான செய்தி” மற்றும் “நல்ல முடிவு” என்று வர்ணித்தார்.
அத்துடன் பிரித்தானியாவை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம் எனவும் பெட்ரோ சான்செஸ் குறிப்பிட்டுள்ளார்.




