இலங்கை செய்தி

தமிழர்களை ஏமாற்றிவிட்டது என்பிபி அரசு: தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு எதுவும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு எதுவும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எவ்வித உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை. விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து, உறுதிமொழிகளைக் கோருவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு தொடர்பில் வரவு – செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நம்பிக்கை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில்கூட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக உறுதியளிக்கப்படவில்லை.

உங்களை நம்பி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், அவர்களின் அரசியல் இருப்பு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள்கூட இல்லை” என்றார் இளையதம்பி சிறிநாத்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை