இலங்கை

திருகோணமலையில் சிறுவன்,சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை – கைது செய்த பொலிஸார்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் வைத்துள்ள முஹம்மது சனுஷ் (28) என்பவரை கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் தனது 2 பிள்ளைகளும் தனது கண்காணிப்பில் இருந்ததாகவும் இந்நிலையில் 5 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை மூன்று வயது சிறுமி சலம் கழிக்கும் போது கத்தி கதறிக் கொண்டிருந்த வேலை குறித்த நபரின் உறவினர்களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதை அவதானித்த வைத்தியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

Signs of Childhood Sexual Abuse - The Cifarelli Law Firm

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று வயது சிறுமியின் வாக்குமூலம் பெற்றதை அடுத்து தனது தந்தையை கைது செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.இதே நேரம் ஐந்து வயது சிறுவனிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தகப்பன் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் 5 வயது சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து 28 வயதுடைய தந்தையை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content