துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில் அவசரநிலை – கடத்தல் குறியீடு பிரயோகம்
துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ‘ஃப்ளைதுபாய்’ (Flydubai) விமானம் ஒன்று, சவூதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டள்ளது.
‘FZ1073’ என்ற எண் கொண்ட குறித்த விமானமானது, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சர்வதேச அவசரநிலைக் குறியீடான ‘7700’-ஐ அனுப்பியுள்ளது.
இது விமானக் கடத்தலைக் குறிக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குறியீடாகும்.
இருப்பினும், விமானத்தைக் கடத்தும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்று ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ (Times of Israel) செய்தி வெளியிட்டது.
பின்னர் அந்த விமானம் சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தின் காக்பிட்டில் (விமானி அறை) விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது இந்த அவசர சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பயணப் பாதை மாற்றப்பட்டதற்கும் அவசர சமிக்ஞை அனுப்பப்பட்டதற்கும் அதிகாரப்பூர்வமான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.




