மத்திய கிழக்கு

நாய் வளர்ப்பிற்கு தடைவிதித்துள்ள எகிப்து ; கவலையில் உரிமையாளர்கள்

எகிப்து அரசாங்கம் டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர் போன்ற நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளமை நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வீலர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

குறித்த இன நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை துறையிடம் ஒப்படைக்குமாறும் அர்சாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையை போல் வளர்த்த நாயை பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் உள்ள நாய் உரிமையாளர்கள், சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவருமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content