உலகம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – 50 பேர் காயம், இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் சாலைகளும் சேதமடைந்துள்ளன.

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து சிறிய சுனாமிக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

முன்னதாக சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் தற்போது அதிகாரிகள் அந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

பின்னதிர்வுகளும் பதிவாகியதால் பாதுகாப்பு கருதி 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் மற்றும் விமான சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்