விளையாட்டு

சென்னை வந்த தோனி… விமான நிலையத்தை தெறிக்கவிட்ட CSK ரசிகர்கள்!

விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில், தோனியை கண்ட ரசிகர்கள், ’தோனி, தோனி’ என விண்ணதிர முழக்கமிட்டனர்.

நடப்பு IPL தொடரில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் தற்போது புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளதோடு, புதிய கேப்டனாக ருத்துரஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, தோனி மீதான அன்பு இன்னும் ரசிகர்களுக்கு குறையவில்லை.

சென்னை விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி

அந்த வகையில் மைதானத்தில் தோனியை கண்டவுடன் உற்சாக குரல் எழுப்புவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 31ம் திகதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வீரர்களை கண்ட ரசிகர்கள், உற்சாக வரவேற்பளித்தனர். குறிப்பாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ’தோனி, தோனி’ என அவர்கள் முழக்கமிட்டது, விண்ணை அதிரும் வகையில் இருந்தது. இதைத் தொடர்ந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு தோனி உட்பட வீரர்கள் விமான நிலையத்திற்குள் சென்றனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Mithu

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ