உலகம் செய்தி

புடினின் சீன பயணத்துக்கு திகதி நிர்ணயம்!

ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மே 19 ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாள் பயணமாகவே அவர் பீஜிங் செல்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது சீனப் பயணத்தை முடித்த கையோடு, ரஷ்ய ஜனாதிபதியின் விஜயம் இடம்பெறுகின்றமை முக்கியத்துவம்மிக்கதாகக் கருதப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி சீனா செல்லவுள்ளார் என நேற்று தகவல் வெளியானாலும், இன்றைய தினமே திகதி வெளியாகியுள்ளது.

இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதி புதின் மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சீனப் பிரதமரையும் புடின் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!