விளையாட்டு

CWC – நெதர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றுது.

இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார்.

அவர் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 87 ரன்னில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார்.

இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 7 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content