இலங்கை

தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்து இந்த நாடு பௌத்த நாடு என்பதை நிரூபித்து நிற்கின்றது: தவத்திரு வேலன் சுவாமிகள்

சிங்கள பௌத்த மக்களை காட்டுமிரண்டித்தனமாக பின்னால் இருந்து மாற்றும் சக்திகளை இந்த பேரினவாத அரசு கண்டும் காணாமல் இருந்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

”சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக்கொல்வேன் என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை,கைதுசெய்யப்படவுமில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் கடந்த 55வது நாளாகவும் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தவத்திரு வேலன் சுவாமிகள் அடையாள உண்ணாவிரதமிருந்தார்.

இன்று காலை தொடக்கம் மாலை வரையில் பண்ணையாளர்களுடன் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டார்.

இந்த போராட்டத்தில் கொழும்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார்,எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

”நல்லிணக்கம் சமாதானத்தை பேசிக்கொண்டு சர்வதேசத்தில் நிதியை திரட்டிக்கொண்டு இங்கு இங்கு தமிழர்கள் தாயகத்தினை கபளீகரம் செய்கின்ற,நில உரிமையினை பறிக்கின்ற,தங்களது வருமானத்தை ஈட்டுகின்ற உரிமையினை பறிக்கின்ற செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகளை அமைத்தல்,நிலங்களை அபகரித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் ஊடாக தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்து இந்த நாடு பௌத்த நாடு என்பதை இந்த நாடு நிரூபித்து நிற்கின்றது.

எந்தவொரு நாடு எந்த கொள்கையில் பயணிக்கின்றதோ அதன் விளைவுகள்தான் அங்கே அடிமட்டத்தில் வெளிப்படுத்தி நிற்கின்றது.திணைக்களங்கள் மகாவலி அபிவிருத்தி சபையாகட்டும் அனைத்து கட்டமைப்புகளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினாலேயே இயக்கப்படுகி;ன்றன.இவற்றின் பேரிலேயெ அபகரிப்புகள்,ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன.இதற்கு அவர்களுக்கு பக்கபலமாக பாதுகாப்பு படையினர் இராப்பகலாக இணைந்திருக்கின்றனர்.

நீதியை நிலைநாட்டவேண்டிய பொலிஸார் நீதிக்கு விரோமாக நடக்கின்றனர்.சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக்கொல்வேன் என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை, கைதுசெய்யப்படவுமில்லை.


ஆனால் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அமைதியான முறையிலே கால்நடைபண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்ககூடிய சூழ்நிலையிலே அவர்களை வீதியில் வழிமறித்து அடாவடியாக இலங்கை பொலிஸார் ஒரு பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.

தெற்கிலே ஒரு நீதி வடகிழக்கிலே ஒரு நீதி,சிங்களவர்களுக்கு ஒரு நீதி,தமிழர்களுக்கு ஓரு நீதி என்பது வெளிப்படையாக இந்த நாட்டை துண்டாடியுள்ளது.இந்த விதத்தில் நாங்கள் இவற்றினை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இந்த மக்கள் 55நாட்களாக வீதியில் போராடிவருகின்றனர்.அவர்கள் பரம்பரையாக ஆண்டுவந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும்.மயிலத்தடு,மாதவனையில் அத்துமீறி குடியேறியுள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பௌத்தமயமாக்கல் வடகிழக்கில் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.நில அபகரிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் ஈழ தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

(Visited 3 times, 1 visits today)

Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page