தமிழ்நாடு

கோவை – பணத்தையும் நகையையும் திருடிய பணிப்பெண்- கையும் களவுமாக பிடித்த வீட்டார்

கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் பாரதி வெளியில் செல்வது போல் புறப்பட்டு படுக்கை அறையில் பீரோவின் எதிரே உள்ள மேல் சிளாபில்(கபோர்டு) ஏறி மறைந்து இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை, மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.

இதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர்கள் பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் காவல் நிலையத்தை ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர்.

தற்போது பணிப்பெண் பாரதி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்