உலகம் செய்தி

நிதி மோசடிகள் அம்பலம்: சீன தொழிலதிபருக்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறை

சீனாவில் சொத்து விநியோகத் துறையில் (Property Developer) கொடிகட்டிப் பறந்த குவோ, அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

சீனாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் குவோ வெங்குய் (Guo Wengui)-க்கு, நிதி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விமர்சகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அமெரிக்காவில் வசிக்கும் சீன மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த பிரம்மாண்ட மோசடியை அவர் அரங்கேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

சீனாவில் சொத்து விநியோகத் துறையில் (Property Developer) கொடிகட்டிப் பறந்த குவோ, அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

எனினும், 2017ஆம் ஆண்டு சீன அரசு இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதை அடுத்து, அவர் அந்நாட்டை விட்டுத் தப்பி அமெரிக்காவில் தஞ்சமடைந்தார்.

அமெரிக்கா வந்த குவோ, சீன கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான ஒரு தீவிரப் போராளியாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

இணையம் வாயிலாகப் பல லட்சம் சீன மக்களின் ஆதரவைத் திரட்டிய அவர், மைல்ஸ் குவோ (Miles Guo), ஹோ வான் குவோக் (Ho Wan Kwok) போன்ற பல பெயர்களில் அறியப்பட்டார்.

2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், சீனாவில் ஜனநாயகத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறி, தனது ஆன்லைன் ஆதரவாளர்களைப் பல்வேறு கிரிப்டோகரன்சி மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களில் இணையச் செய்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை அவர் திரட்டியுள்ளார்.

இந்த நிதியைக் கொண்டு அவர் செய்த காரியங்கள் குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களை அடுக்கினர்.

50,000 சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட சொகுசு மாளிகை.

37 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பரப் படகு (Yacht).

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள லம்போர்கினி கார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த குவோ, இந்தப் பணம் அனைத்தும் தனது அரசியல் செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று வாதிட்டார்.

ஆனால், அவர் தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கைக்காகவே மக்களின் பணத்தைச் சூறையாடினார் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற நீதிபதி அனாலிசா டோரஸ் தீர்ப்பின் போது, “சீனாவிற்கு ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று துடித்த அப்பாவிகளைத் திட்டமிட்டு வேட்டையாடி, அவர்களின் பணத்தில் குவோ ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்” என்று மிகக் கடுமையாகக் சாடினார்.

சீன அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் மூத்த ஆலோசகரான ஸ்டீவ் பானன் (Steve Bannon) உடன் குவோ கைகோர்த்தார்.

2020ஆம் ஆண்டில், இவர்கள் இருவரும் இணைந்து “நியூ பெடரல் ஸ்டேட் ஆஃப் சீனா” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி