இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறவுள்ளது.

இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாலும் எரிபொருளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் 31ஆம் தேதி எரிபொருள் விலையில் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரக எரிபொருள் 07 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் 447 இன் விலை 440 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 72 ரூபாவால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 386 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் இலங்கை மண்ணெண்ணெய் 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்