பொழுதுபோக்கு

‘கேப்டன் மார்வெல்’ நடிகர் கென்னத் மிட்செல் திடீர் மரணம்

கனடா நாட்டை சேர்ந்தவர் கென்னத் மிட்சல். ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்தார். ‘தி ரெக்ரூட்’, ‘மிராக்கிள் ஹோம்’, ‘ஆப் தி ஜெயன்ட்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார்.

2019ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் மார்வெல்’ படத்தில் இவர் ஏற்ற ஜோசப் டான்வெர்ஸ் கதாபாத்திரம், உலகளவில் ரசிகர்களை பெற்று தந்தது. 50க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பு மற்றும் மூளை நரம்பு செல்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கென்னத் மிட்செல், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

படுத்த படுக்கையில் தொடர்ந்து உயிருக்கு போராடி வந்தார். அவரது உறவினர்கள் அவரை பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் கென்னத் மிட்செல் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“கென்னத் மிட்செல், அன்பான தந்தை, கணவர், சகோதரர், மாமா, மகன் மற்றும் அன்பான நண்பராக வாழ்ந்து காலமானதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அன்பு, இரக்கம், நகைச்சுவை, உள்ளடக்கம் மற்றும் சமூகத்துடன் நீங்கள் வாழும்போது ஒருவர் எவ்வளவு முழுமையாக இருக்க முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கென்னத் மிட்செல்லின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘மிக நல்ல நடிகர் நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று மார்வெல் பட குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கென்னத் மிட்செல்லுக்கு சூசன் மேரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content