செய்தி விளையாட்டு

கனடா அணி கோல் வேட்டை: நேரில் களமிறங்கினார் பிரதமர்

ஜொனாதன் டேவிட்டின் சாதனை, வட அமெரிக்கக் கால்பந்து வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கனடா அணி , கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

நட்சத்திர வீரர் ஜொனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், கத்தார் அணியின் இரண்டு வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும், கனடா வீரர் இஸ்மாயில் கோனே சந்தித்த கடுமையான காயம் மற்றும் போட்டியின் இறுதியில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஆகியவை மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த முக்கியமான வெற்றியின் மூலம் கனடா தனது பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க வலுவான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ஜொனாதன் டேவிட்டின் சாதனை, வட அமெரிக்கக் கால்பந்து வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட ஒரு முக்கிய மைல்கல்லாக  பார்க்கப்படுகின்றது.

வான்கூவரில் உள்ள BC Place மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், Jonathan David ஹாட்ரிக் கோல் அடித்தார்.

கனடா பிரதமர் Mark Carney நேரில் வந்து கனடா அணியை உற்சாகப்படுத்தியதால் வான்கூவரில் கொண்டாட்ட சூழல் நிலவியது.

ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தின் நடுவே மோதல் வெடித்தது. பின்ன FIFA தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தினர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி