வட அமெரிக்கா

பாதுகாப்பு வழங்க மறுப்பு தெரிவித்த கனடா ; 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்

கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதன்காரணமாக டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருந்த 14 சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா – கனடா உறவில் இது மேலும் விரிசலை ஏற்படுத்திஉள்ளது.

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தவிவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என்று கனடாஅமைச்சர் டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கு மத்தியஅரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

கனடாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். மத்திய அரசில் பணியாற்றிய பலர் ஓய்வுக்கு பிறகு கனடாவில் குடியேறி உள்ளனர். அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி கனடாவின் டொரன்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் சமீபத்தில் இந்திய தூதரகம் சார்பில் ஓய்வூதியர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது கோயில் மீதும், பக்தர்கள், ஓய்வூதியர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில் டொரன்டோ, வான்கூவர், பிராம்ப்டன், வின்னிபெக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓய்வூதியர்களுக்காக 14 சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தூதரக அலுவலகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. நவம்பர் 23-ம் திகதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

காலிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க கனடா அரசிடம் முறைப்படி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு வழங்க கனடா அரசு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கான 14 சிறப்பு முகாம்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்