பிரிட்டன் மக்கள் தியாகங்களை செய்து போருக்கு தயாராக வேண்டும் – இராணுவ தளபதிகள் அழைப்பு
பிரித்தானிய மக்கள் தியாகங்களை செய்து போருக்கு தயாராக வேண்டும் என இராணுவ தளபதிகள் வலியிறுத்தியுள்ளனர்.
95,000 மூலோபாய இருப்புப் படை வீரர்களில் சுமார் 45,000 பேரை பாதுகாப்பு அமைச்சகத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து இராணுவ தளபதிகளின் இந்த அழைப்பு வந்துள்ளது.
அவசர காலங்களில் பணியாற்ற சட்டப்பூர்வ கடமைப்பட்ட முன்னாள் படை வீரர்களுடன் மீண்டும் இணைய அரசாங்கம் முயற்சிக்கிறது.
பனிப்போருக்குப் பிறகு இராணுவ வீரர்களை தொடர்புகொள்ள அரசாங்கம் முயல்வது இதுவே முதல் முறையாகும்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் பணியிலிருந்து விலகியவர்கள் பதிலளிப்பதற்காக 50 பவுண்ட்ஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் தேசிய மீள்திறனைக் கட்டியெழுப்ப இது ஒரு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் விவரித்துள்ளார்.




