நேட்டோ ‘ஸ்பிரிங் ஸ்டோம்’ பயிற்சிக்குத் தயாராகும் பிரித்தானிய படை – ரஷ்ய எல்லை அருகே தீவிர இராணுவ ஒத்திகை
நேட்டோ (NATO) பயிற்சிக்காக பால்டிக் (Baltic)நாடுகளுக்குச் செல்வதற்கு தயாராவதற்காக ஸ்கொட்லாந்தின் Royal Regiment படையினர் நகர்ப்புறப் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படையின் 2வது பட்டாலியன் (Battalion) வீரர்கள், ரஷ்ய எல்லைக்கு அருகில் நடைபெறும் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியான ‘Spring Storm’ பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் பயிற்சி ஐரோப்பா முழுவதிலுமிருந்து நட்பு நாடுகளின் படைகளை ஒன்றிணைத்து, அவர்களின் போர் தயார்நிலையை சோதிக்கும் வகையில் நடைபெறுகிறது.
இதன் மூலம் எஸ்டோனியா (Estonia) ஆயுதப்படைகளின் திறனும் மதிப்பீடு செய்யப்படுவதுடன், பிராந்திய பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.
மேலும், வடக்கு இங்கிலாந்து (Northern England) முழுவதும் கடினமான சூழ்நிலைகளுக்கு தயாராக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடி துப்பாக்கிச் சூடு, நகர்ப்புறப் போர் பயிற்சிகள் மற்றும் (சினூக்) Chinook ஹெலிகாப்டர் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் தீவிர பயிற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.





