ஐரோப்பா

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடத் தயாராகும் பிரித்தானியா!

நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதாக பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவிடம் அவர் இன்று இந்த தகவலை தெரிவித்ததாக டவுனிங் தெரு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ஸ்டாமர் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடலில்,  நேட்டோ உறுப்பு நாடுகள் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், பொதுவான மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு முதலீடு தொடர்பான சர்ச்சைகள் காரணமாக தொழிலாளர்க கட்சியின் முக்கிய எம்.பியான ஜோன் ஹீலி பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்