செய்தி விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தியது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.

மிர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 413 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 386 ஓட்டங்களையும் பெற்றன.

27 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 240 ஓட்டங்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக அணி தலைவர் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 87, மொமினுல் ஹக் 56 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதையடுத்து 268 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 52.5 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அப்துல்லா பாஸல் 66, சல்மான் ஆகா 26, சவுத் ஷகீல் 15, முகமது ரிஸ்வான் 15, அஸான் அவைஸ் 15 ஓட்டங்களை சேர்த்தனர்.

இப்போட்டியில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 16-ம் திகதி சைல்ஹெட் நகரில் தொடங்குகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி