ICC நீதிமன்றம் மீதான தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – நவநீதம் பிள்ளை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற நவனீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ICC நீதிபதியான இவருக்கு, “அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காகவும்”, “மேலும் விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்குமுறைக்கு” வழிவகுத்ததற்காகவும் கடந்த வெள்ளிக்கிழமை நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த தெரிவு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நோர்வேயை கடுமையாக சாடியிருந்ததுடன், நவநீதம் பிள்ளையை மர்மமான நபர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ICC நீதிமன்றம் மீதான புதிய தடைகள் அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நவநீதம் பிள்ளை, இந்த தடைகள் கேள்விப்படாத ஒன்று” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்கா ஏற்கனவே 17 ICC நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




