வட அமெரிக்கா

அமெரிக்காவில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வாங்க தானியங்கி இயந்திரங்கள்…

அமெரிக்காவில் துப்பாக்கித் தோட்டாக்களை வாங்க தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்நாட்டின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அத்தகைய இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. துப்பாக்கித் தோட்டாக்களைப் பாதுகாப்பான முறையில் வாங்க இதுவே ஆகச் சிறந்த முறை என்பது அந்நிறுவனத்தின் வாதம்.

அமெரிக்கன் ரவுண்ட்ஸ் என்ற அந்நிறுவனம், அத்தகைய ஆறு இயந்திரங்களை டெக்சஸ், அலபாமா, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் இருக்கும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளில் செயல்படுத்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் டெக்சஸ், கொலராடோ மாநிலங்களில் மேலும் இரண்டு இயந்திரங்களைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்கன் ரவுண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரான்ட் மேகர்ஸ் கூறினார்.

எந்த வகை துப்பாகிக்கான தோட்டாக்கள் வேண்டும் என்பதை இயந்திரத்தின் தொடுதிரையில் வாடிக்கையாளர்கள் தெரிவிப்பர். பிறகு குறிப்பிட்ட தோட்டாக்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவர்.

அதற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் சோதனைக் கருவியில் தங்களின் அடையாள அட்டையை வைக்கவேண்டும். இயந்திரத்தில் உள்ள கேமரா அவர்களைப் படமெடுத்து அடையாளம், அவர்கள் 21 வயதைத் தாண்டியவர்களா ஆகிய விவரங்களை உறுதிப்படுத்தும்.

வங்கி அட்டைகளைக் கொண்டு மட்டும்தான் இயந்திரத்தில் தோட்டாக்களை வாங்க முடியும் என்றும் அது ரொக்கத்தை ஏற்றுக்கொள்ளாது என்றும் திரு மேகர்ஸ் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்