ஐரோப்பா

அமெரிக்க தயாரிப்பானM1A1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா தனது பழைய M1A1 ஆப்ராம்ஸ் டாங்கிகளில் 49 டாங்கிகளை  உக்ரைனுக்கு வழங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

245 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($163 மில்லியன்) மதிப்புள்ள அமெரிக்கத் தயாரிப்பான M1A1 டாங்கிகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மார்ல்ஸ், உக்ரைனுக்கு எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்குவது என்பது பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க சர்வதேச போக்குவரத்து விதிமுறைகளின்படி, டாங்கிகளை உக்ரைனுக்கு மாற்ற அவுஸ்திரேலியாவுக்கு தேவையான அனுமதியை அமெரிக்கா வழங்கியதாக பாதுகாப்புத் தொழில் மற்றும் திறன் விநியோக அமைச்சர் பாட் கான்ராய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்