இந்தியா

பாராளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வருகை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக கோவை ரயில் நிலையம் வந்த 3″ கம்பெனி துணை இராணுவத்தினரை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர்.

பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் திருப்பூர், நீலகிரியில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content