ஐரோப்பா

அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டம் – எதிர்வினையாற்றிய ரஷ்யா!

கிரீன்லாந்தில் ஆயுதங்களை வைக்க வொஷிங்கடன் நடவடிக்கை எடுத்தால் மொஸ்கோ பதிலளிக்க தயாராக உள்ளது என ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்க்டிக் தீவில் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergey Ryabkov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ அமெரிக்கர்கள் பிராந்தியத்திற்கு சில ஆயுத அமைப்புகளை செலுத்த விரும்பினால் அல்லது  கிரீன்லாந்தில் அவர்களின் கோல்டன் டோம் கருத்தின் சில கூறுகளை நிலைநிறுத்தினால், அது இராணுவ மற்றும் தொழில்நுட்ப இழப்பீட்டு நடவடிக்கைகள் தேவைப்படும் ஒரு சூழ்நிலையாக இருக்கும், மேலும் எங்கள் நிபுணர்கள் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பார்கள்” என்று  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான புதிய START ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் செர்ஜி ரியாப்கோவின் கருத்துக்கள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்