ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் திட்டங்களை வகுக்கும் அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட விளக்கங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் (Brad Cooper) மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரிடமிருந்து அவர் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார்.
ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது சாத்தியமான “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் முற்றுகை தொடர்கின்ற நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.





