பொழுதுபோக்கு

கில்லி பேனர் கிழிப்பு.. தியேட்டருக்குள் பட்டாஸ்.. அட்டகாசம் பண்ணும் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கில்லி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ஓடிவந்த நிலையில், தற்போது தீனா ரீ ரிலீஸை முன்னிட்டு தியேட்டருக்கு வந்த அஜித் ரசிகர்கள் கில்லி பேனரை கிழிக்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

மேலும், ரீ ரிலீஸ் கொண்டாட்டம் என்னன்னு நாங்க காட்டுறோம் பாருங்கடா என்று போட்டா போட்டி போட்டு ரோகினி தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

கில்லி படம் மீண்டும் வெளியாகி கொண்டாட்டங்கள் நடந்தாலும் எந்த ஒரு அசம்பாவிதம் சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் எல்லை மீறி செல்வதாக குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் அஜித் குமாரின் தீனா திரைப்படம் வெளியான நிலையில், அங்கு வந்த அஜித் ரசிகர்கள் ” வத்திக்குச்சி பத்திக்காதுடா” பாடலைப் பார்த்துக்கொண்டே தியேட்டரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சிகள் பகீரை கிளப்பியுள்ளன.

கடந்தாண்டு பொங்கலுக்கு அஜித் குமார் நடித்த துணிவு படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி நின்று நடனமாடி வந்த நிலையில் கீழே விழுந்து மரணம் அடைந்தார். அஜித் ரசிகர்கள் தற்போது தியேட்டரில் கில்லி படத்தின் போஸ்டர்களை கிழித்து வரும் நிலையில் இருதரப்புக்கும் மத்தியில் சண்டை வெடித்தால் என்ன விளைவு நடக்குமோ? என்கிற அச்சமும் எழுந்து வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்