ஐரோப்பா

இடம்பெயர்வோரின் வயதை கணிக்கும் AI தொழில்நுட்பம் : உள்துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

சிறு படகுகளில் இடம்பெயர்ந்தோரின் வயதை மதிப்பிடுவதற்காக செயற்கை நுண்றிவு கருவியை பயன்படுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மனிதாபிமான அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக வயது மதிப்பீட்டு (FAE) தொழில்நுட்பம், பதின்ம வயதினரைத் தவறாக வயது வந்தவர்களாக அடையாளம் காண்பதாகவும், இனப் பாகுபாட்டைக்” கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக,  சஹாரா,  ஆப்பிரிக்காவிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோரைக் கண்டறிவதில் மிகக் குறைந்த துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் 14 வயது சிறுமியை வயது வந்தவராகக் கணிக்கும் வாய்ப்புள்ளதாகவும் இதனால் அச்சிறுவர்களுக்கு கிடைக்கவேண்டிய சமூக நலத்திட்டங்கள் கிடைக்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அவசரமாக ஏற்றுக்கொண்டதாகவும், அதன் குறைபாடுகள் குறித்த விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு குழுவைக் கலைத்துவிட்டதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரைப் பொறுத்தவரை, அதன் உள்ளார்ந்த தோல்விகள், பாகுபாடு மற்றும் துல்லியமின்மையைக் காரணம் காட்டி, FAE அறிமுகத்தை நிறுத்துமாறு 60  அமைப்புகள் உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தையும்  அனுப்பியுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்