ஐரோப்பா

போலந்தில் விநோதம் – AI தொழில்நுட்பத்திற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்!

  • September 12, 2026
  • 0 Comments

போலந்தின் வர்சா நகரில் ரோபோக்கள் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபோ தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது. தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நியூயார்க் அரச பாடசாலைகளில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை

  • September 2, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரத்தில்  அரசுப் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை இந்த தடை அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது. குழந்தைகளின் மனநலம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பது, அத்துடன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது போன்ற கவலைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கப் பாடசாலை அமைப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல்  உயர்நிலைப் பாடசாலை வரை  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் விடயத்தை நன்கறிந்த வட்டாரம் […]

கருத்து & பகுப்பாய்வு

வரமா? சாபமா? – AI தொழில்நுட்பத்திற்கு மாறும் பிரித்தானிய வணிகங்கள்

  • August 18, 2026
  • 0 Comments

பெரும்பாலான பிரித்தானிய வணிகங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறுகின்றன. மேலும், நிறுவனங்கள் பரிசோதனைகளைக் கடந்து, இந்தத் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு ஆள்சேர்ப்பு முறைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. லாய்ட்ஸ் பிசினஸ் பாரோமீட்டர் Lloyds Business Barometer நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வில் இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களில் கால் பகுதியினர் AI திறன் கொண்ட வேட்பாளர்களை அதிகளவில் பணியமர்த்துவதாகவும், ஐந்தில் ஒரு பகுதியினர் AI-க்கென பிரத்யேகமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் […]

உலகம்

சீனாவில் AI தொழில்நுட்பத்தை நம்பிய விவசாயி – ஒரேநாளில் அனைத்தையும் இழந்த பரிதாபம்

  • August 11, 2026
  • 0 Comments

சீனாவில் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிய சீன விவசாயி ஒருவர் ஒரே நாளில் தனது மொத்த உழைப்பையும் இழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீனாவின் சூசோவில் உள்ள 67 வயதான விவசாயி ஒருவர்,   செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வழங்கிய பூச்சிக்கொல்லி ஆலோசனையைப் பின்பற்றியதால், ஒரே இரவில் தனது 25 ஏக்கர் எள் பயிரை இழந்துள்ளார். அந்தச் செயற்கை நுண்ணறிவு, ஃப்ளூஃபெனாசெட் (flufenacet)  என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகவும், அது களைகளையும் எள் நாற்றுகளையும் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணலையின் […]

ஐரோப்பா

இடம்பெயர்வோரின் வயதை கணிக்கும் AI தொழில்நுட்பம் : உள்துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

  • June 18, 2026
  • 0 Comments

சிறு படகுகளில் இடம்பெயர்ந்தோரின் வயதை மதிப்பிடுவதற்காக செயற்கை நுண்றிவு கருவியை பயன்படுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மனிதாபிமான அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக வயது மதிப்பீட்டு (FAE) தொழில்நுட்பம், பதின்ம வயதினரைத் தவறாக வயது வந்தவர்களாக அடையாளம் காண்பதாகவும், இனப் பாகுபாட்டைக்” கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக,  சஹாரா,  ஆப்பிரிக்காவிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோரைக் கண்டறிவதில் மிகக் குறைந்த துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் 14 வயது சிறுமியை […]

உலகம்

ஏவுகணை அமைப்பில் AI தொழில்நுட்பம் : முதல் முறையாக ஒப்புக்கொண்ட வடகொரியா!

  • May 27, 2026
  • 0 Comments

வட கொரியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை  பயன்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம்  இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இலகுரக பல்நோக்கு ஏவுகணை ஏவுதல் அமைப்பு மற்றும் பல தந்திரோபாய பயண ஏவுகணை ஆயுத அமைப்பு” ஆகியவற்றைச் சோதிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “சோதனை முடிவுகளை  பாராட்டிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்,  தொழில்நுட்ப பயன்பாடு குறித்து மிகவும் திருப்தியடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

உளவு நடவடிக்கையில் AI தொழில்நுட்பம் – நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உளவுத் திட்டம் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் குற்றவாளிகளை கண்டறிவதற்காக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரகசியமாக பயன்படுத்தியது. இதில் பாலியல் நோக்கங்களுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக மெட் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, கூடுதல் நேரப் பணிக்காகப் பொய்யான […]