பொழுதுபோக்கு

32 வயதில் இத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரியா அமலா பால்?

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அமலா பால் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஆடை படத்திற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஏ.எல். விஜய் உடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் இருந்து ரொம்பவே ஒதுங்கி சென்று விட்டார்.

கடைசியாக கடாவர் படத்தை தயாரித்து நடித்து இருந்தாலும், அந்த படத்தை ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்திருந்தார்.

1991ம் ஆண்டு நடிகை அமலா பால் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் பிறந்தார். மாடலிங்கில் இருந்த ஆர்வம் அவரை அப்படியே 2009ல் நீல தாமரா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அமலா பால் அறிமுகமானாலும், அவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இன்று தனது 32வது பிறந்தநாளை நடிகை அமலா பால் கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

ஒரு படத்துக்கு சுமார் 2 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அமலா பால் 32 வயதில் 32 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க கிளம்பி விடும் அமலா பால் அங்கே எடுத்துக் கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் உள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content