இந்தியா

சுட வைத்த இரும்பு ராடால் இளம்பெண்ணின் முகத்தில் பெயர் எழுதிய இளைஞர்… உத்திர போரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் !

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன் சூடான இரும்பு கம்பியால் அவரது கன்னத்தில் பெயரை எழுதி சித்ரவதை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியைச் சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவருடைய நடத்தை பிடிக்காததால், அப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

அதனால், அப்பெண்ணின் மீது ஹூசனை கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் கை, கால்களைக் கயிற்றால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

9 Signs Of Emotional Abuse | Mindwell NYC

மேலும், அப்பெண் மீதான ஆத்திரம் தீராமல் சூடான இரும்பு ராடால் முகத்தில் சூடு வைத்துள்ளார். மேலும், ஹூசைன் என்ற தன் பெயரை, அப்பெண்ணின் முகத்தில் சூடான இரும்பு ராடு மூலம் எழுதி சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பித்து வந்த இளம்பெண், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து கெரி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அமன் ஹூசைன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அமன் ஹூசைனுக்கு உடந்தையாக, அவரது தாயாரும், சகோதரியும் இருந்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அமன் ஹூசனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content