ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பாதசாரிகள் கடவையில் கடந்து கொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது வேண்டுமென்றே மோதிக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் Mâcon (Saône-et-Loire) நகரத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை மோதிய வாகனம், இந்த விபத்தைத் தவிர்க்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும், நேரடியாக இந்தப் பெண்ணை மோதிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளான்.

இந்தப் பெண், இந்தக் கொலைமுயற்சிக்குச் சில வாரங்களிற்கு முன்னர், போதைப்பொருட் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களிற்கு எதிராகச் சாட்சியம் வழங்கியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை முயற்சி நடந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கெள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்