ஐரோப்பா

பிரான்ஸில் உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வளர்ப்பு நாய்

பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று மேற்கொண்ட கோரத்தாக்குதலில் அதன் உரிமையாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Rottweiler வளர்ப்பு நாய் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதன் உரிமையாளரை தாக்கியுள்ளது.

பொலிஸார் அழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்றடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.

வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவரின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடித்து குதறியதில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளார். அவர் உயிரிழந்தவரின் தாயார் என அறிய முடிகிறது.. மேலும் இருவர் உயிரச்சத்தில் அருகில் உள்ள வாகனம் ஒன்றுக்குள் பதுங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

குறித்த Rottweiler நாய் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content