வாழ்வியல்

எடை குறைப்பில் தர்பூசணி எடுத்துக் கொள்பவரா நீங்கள்? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்

தீவிரமாக எடை குறைப்பில் ஈடுபட முயன்ற போது நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வாரம் தினமும் தர்பூசணிப் பழம் மட்டுமே சாப்பிட்டுப் பாருங்களேன். வார இறுதியில் நிச்சயமாக 1 கிலோ குறைந்து விடுவீர்கள். அதையே இடைவெளி எடுத்துக் கொண்டு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் 4 கிலோ குறைந்து விடும் என்றார்.

இப்படி உங்களுக்கும் உங்களுடைய நண்பர் குழாம் பல்வேறு இலவச எடை குறைப்பு ஆலோசனைகளை அள்ளி வழங்கி இருக்கலாம். ஆனால், தயவு செய்து உரிய மருத்துவ ஆலோசனை இன்றி அப்படியெல்லாம் எடை குறைப்பில் இறங்கி விடாதீர்கள். வெறும் பழச்சாறு மட்டுமே உண்டு இரண்டு மாதங்கள் உயிர் வாழ்வதென்பது எளிதான விஷயமல்ல. அதற்குள் எடை குறகிறதோ இல்லையோ உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை இழக்கத் தொடங்கி விடுவோம்.

This watermelon diet can help you lose loads of weight quickly! | The Times of India

நமது உடல் ஆரோக்யமாக இருக்க கார்போஹட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புச் சத்து, விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள், என அனைத்தும் தான் தேவை. எடை குறைக்கிறேன் என்று மேலே சொன்னவற்றில் எது ஒன்றைத் தவிர்த்தாலும் அது வேறு சில உபத்திரவங்களில் கொண்டு விடுமே தவிர, நாம் வெகு விரைவில் மந்திரம் போட்டாற் போல் சிக்கென்று மெலிந்து ஸ்லிம் ஆகி விட மாட்டோம்.

Watermelon to loose your weight

இப்போது இந்த வாட்டர் மெலன் கட்டுக்கதைக்கு அனுபவம் வாய்ந்த நியூட்ரிசனிஸ்ட் என்ன விளக்கம் தருகிறார் என்று பார்ப்போமா?

அமெரிக்காவில் நியூட்ரிஷனில் முதுகலை அறிவியல் (எம்.எஸ்.) பட்டம் பெற்று 15 வருட பணி அனுபவம் வாய்ந்தவரான நியூட்ரிசனிஸ்ட் மைக்கேல் கொலாஞ்சலோ என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

தர்பூசணி குறைந்த கலோரிகள் கொண்ட கொழுப்புச் சத்து அற்ற ஒரு பழமாகும், இது எடை இழப்புக்கான உணவாக மிகச்சிறந்த முறையில் செயலாற்றுகிறது. ஆனால், நீங்கள் நினைக்கிற படி ஜீம்பூம்பா மந்திரத் தனமாக அல்ல!

தர்பூசணி மட்டும் உடல் எடையை குறைக்காது, இருப்பினும், உணவுடன் அல்லது சிற்றுண்டியாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள அதிக நீர்ச்சத்து உங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிலர்,தர்பூசணி உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதாகக் கவலைப்படுகிறார்கள்; இருப்பினும், ஒரு கப் தர்பூசணியில் குறைந்த கிளைசெமிக் குறியூடு மட்டுமே உள்ளது. வேறு விதமாகச் சொல்வதானால், நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவு நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, அப்படிப் பார்த்தால், தர்பூசணியை கொஞ்சமாக உண்டாலும் கூட அதில் சிறிதளவு கார்போஹைட்ரேட் உள்ளது என்பது நிஜமே!

Can I Eat Watermelon And Lose Weight

Can I Eat Watermelon And Lose Weight

ஆகவே சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஆகவே, அப்படிப்பட்டவர்களுக்கு மேலே உள்ளதைப் போன்ற இலவச ஆலோசனைகள் எல்லாம் தற்கொலைக்குச் சமம்.

உண்மையில் தர்பூசணியில் மிக அதிக நீர்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கொழுப்புச் சத்து உள்ளது அத்துடன் ஒரு கப் தர்பூசணியில் குறைந்த அளவான கலோரிகள் மட்டுமே உள்ளன என்பதால் கொஞ்சம் கூடுதலாக உண்ணும் போது கூட பசி மந்தித்து வயிறு நிறைந்து விட்ட உணர்வைத் தந்து விடுவதால் பசியைக் குறைத்து மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது. எடை இழப்பு முயற்சிகளில் இது ஒரு சிறந்த இனிப்பு மாற்றாகவும் அமைகிறது.

Health Benefits of Watermelon – Cleveland Clinic

தர்பூசணி உண்ணும் போது ஒவ்வொரு 100 கிராமுக்கும் 30 கிலோகலோரிகள், சுமார் 0.4 கிராம் நார்ச்சத்து மற்றும் அதிக சதவீத நீரை வழங்குகிறது. எனவே, இப்படித்தான் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தர்பூசணி ஒரு நல்ல தேர்வாகப் பொருந்தக் கூடுமே தவிர மேலே குறிப்பிட்டதைப் போல ஒரேயடியாக தர்ப்பூசணி மட்டுமே உண்பதால் அல்ல. என்கிறார் நியூட்ரிசனிஸ்ட் மைக்கேல் கொலாஞ்சலோ.

மேலும் விளக்கமாகச் சொல்வதானால்; ஒரு தர்பூசணியின் எடையில் 90% தண்ணீர் இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சாப்பிடுவதற்கு இது சிறந்த பழங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. அது மட்டுமல்ல, தர்பூசணிப் பழம் அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது கொழுப்பை விரைவாக எரிக்க உதவுகிறது. கூடுதலாக இதில் உள்ள லைக்கோபென் எனும் நிறமியானது கொழுப்பை எரிக்க உதவக்கூடியது என்கிறார்கள் அதன் காரணமாகவும் இதை எடை இழப்புக்கு உகந்த பழமெனக் கருத வலுவான வாய்ப்பு உண்டு.

எனவே எடை குறைப்பு ஆலோசனைகள் எங்கிருந்து கிடைத்தாலும் எப்படிக் கிடைத்தாலும் உடனே செயலில் இறங்கி விடாதீர்கள். யோசியுங்கள், நிபுணர்களிடம் கலந்து பேசி சரியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content