ஆசியா

தன்னை விட 50 வயது மூத்த ஓவியரை திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி!

சீனாவை சேர்ந்த பிரபல ஓவியர் பேன் ஜெங். 85 வயதான இவருக்கு 3 முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்றாவது மனைவியான ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் பேன் ஜெங் அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் மாடல் அழகியான சூ மெங் (35) என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதில் இருந்து மீண்டார். அவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பேன் ஜெங் சமீபத்தில் ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும், நீண்ட கருப்பு முடியுடன் ஒரு இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதனுடன் அவரது பதிவில், சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது என்று கூறி இருந்தார்.

சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார். பல சர்வதேச நிறுவனங்களுக்கு சர்வதேச பிராண்ட் மாடலாக இருந்த இவர் தற்போது தன்னை விட சுமார் 50 வயது அதிகமான கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில்,பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content