இந்தியா செய்தி தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் சர்ச்சை: தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்கள் தடுத்து வைப்பு

தமிழகத்தின் மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தீபம் ஏற்றப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிடுவதற்காக மதுரைக்குச் செல்ல நயினார் நாகேந்திரன் திட்டமிட்டிருந்தார்.

எனினும், அவர் திருநெல்வேலியில் உள்ள வீட்டிலிருந்து வெளியேற முடியாத வகையில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்த நயினார் நாகேந்திரன், 10,000 பொலிஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நவம்பர் 20ஆம் திகதி உச்ச நீதிமன்றம் ஒருமுறை அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அதனை அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இதனையடுத்து, சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி