உலகம்

ஆஸ்திரேலியாவில் காதல் நாடாளுமன்றம்’ – ஒரு சுவாரஸ்ய சம்பவம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில நாடாளுமன்றத்தின் வழக்கமான சட்டமன்ற நடவடிக்கைகளின் போது  தனித்துவமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பதவி விலகும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டான் லேன் (Jordan Lane) , தனது பிரியாவிடை உரையின் போது, ​​நாடாளுமன்ற அவையில் தனது நீண்டகால காதலியான நட்டாலிக்குத் (Natalie) திருமணப் பிரேரணையை முன்வைத்தார்.

“சபாநாயகர் அவர்களே, ரைட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது கடைசி கேள்வி, என் அன்புக்குரிய நட்டாலிக்காகத்தான்,” என்று அவர் அவையில் கூறினார்.

ஒரு திருமண மோதிரத்தை வெளியே எடுத்து, மண்டியிட்டு, “என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்டார்.

பத்தாண்டுக்கும் மேலாக அவரது காதலியாக இருந்த நட்டாலி, மகிழ்ச்சியுடன் அந்தப் பிரேரணையை ஏற்றுக்கொண்டு அவரைக் கட்டிப்பிடித்தார்.

இதைக் கண்ட நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது இருக்கைக்குத் திரும்பி, “ஹான்சார்டில் அவர் ‘ஆம்’ என்று கூற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும், அந்தச் சிறப்புத் தருணம் அதிகாரப்பூர்வ நாடாளுமன்றப் பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்ற சபாநாயகர் கிரெக் பைப்பர், புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, 58வது நாடாளுமன்றம் ‘காதல் நாடாளுமன்றம்’ என வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்