வட அமெரிக்கா

கனடாவின் வான்கூவரில் தெரு திருவிழாவில் SUV மோதியதில் 9 பேர் பலி

கனடாவின் வான்கூவர் நகரில் கார் ஒன்று கூட்டத்துக்குள் சென்றது.இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக வான்கூவர் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று வான்கூவர் காவல்துறையினர் நம்புகின்றனர்.

30 வயது சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை முன்னதாகச் சொன்னது. உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணியளவில் ஓட்டுநர் ஒருவர் ஈஸ்ட் 41வது அவென்யூ அண்ட் ஃபிரேசர் பகுதியில் சாலை நிகழ்ச்சியில் திரண்டிருந்தோர் மீது காரைச் செலுத்தியதாக காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘லப்பு லப்பு’ நிகழ்ச்சியின்போது பாதசாரிகள் சிலரை கார் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ‘லப்பு லப்பு’, பிலிப்பீன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகும்.

காலனித்துவ ஆட்சியை எதிர்த்த 16ஆம் நூற்றாண்டு பிலிப்பீன்ஸ் தலைவர் ஒருவரைக் கொண்டாடும் ‘லப்பு லப்பு’, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ள கனடியப் பொதுத் தேர்தலுக்கு முந்தைய வார இறுதியில் வந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கனடியப் பிரதமர் மைக்கல் கார்னி, “வான்கூவர் லப்பு லப்பு நிகழ்ச்சியில் இன்று மாலை நடந்த நிகழ்வுகளைக் கேட்டபோது பேரதிர்ச்சி அடைந்தேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

வான்கூவர் மேயர் கென் சிம் எக்ஸ் தளத்தில் அதிர்ச்சி வெளிப்படுத்தியதோடு பாதிக்கப்பட்டோருக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.“மிகத் துயரமான இந்நேரத்தில் பாதிக்கப்பட்டோரும் வான்கூவரின் பிலிப்பீனிய சமூகத்தினரும் எங்கள் நினைவில் இருக்கின்றனர்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்