இலங்கை

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்பநிலைக்கு உரிய கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரக்கூடிய எச்சரிக்கை அளவை தாண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது என்றும், இது உங்கள் உடலில் உணரப்படும் நிலையாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்