இந்தியாவுடன் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டது சீஷெல்ஸ்
இந்தியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
இதையொட்டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்கப்பட்டது.
அந்நாட்டு ஜனாதிபதி பாட்ரிக் ஹெர்மினி, விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விருதையும் சேர்த்து பிரதமர் மோடி இதுவரை 33 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
சீஷெல்ஸ் ஜனாதிபதி பாட்ரிக் ஹெர்மினியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



