தொடரும் எம்எல்ஏக்களின் வெளியேற்றம்: திணறும் அதிகமு
அதிமுகவின் கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமித்தார் பழனிசாமி.
ஏனினும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இப்போது 6வது எம்எல்வாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




