அரசியல் இலங்கை செய்தி

NPP அரசுக்கு அடுத்த ‘பொறி’ – எதிரணிகள் வியூகம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது.

அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்பவற்றை மீறிட்டார் என்பதை பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்து இதற்குரிய ஏற்பாடு இடம்பெறுவதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெற்றிடத்தை நிரப்பும் விடயத்தில் அரசமைப்பு பேரவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எதிரணி உறுப்பினர்கள் வசம் உள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்குரிய உறுப்பினர் பலம் இல்லாததாலேயே, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரேரணையை நிறைவேற்ற முடியாவிட்டாலும், விவாதத்தின்மூலம் தகவல்களை வெளிப்படுத்த முடியும் என எதிரணி நம்புகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை